துயர் பகிர்வு அறிவித்தல்
திரு தம்பிராசா இராசதுரை
பிறப்பு : 19 பெப்ரவரி 1958 — இறப்பு : 4 செப்ரெம்பர் 2017
யாழ். நல்லூர் ஆடியபாதம் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Guelph ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா இராசதுரை அவர்கள் 04-09-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா(பெற்றோல் நிரப்பு நிலையம்- நல்லூர் சந்தை) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னையா, பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்புச்செல்வி அவர்களின் ஆருயிர் கணவரும், குமரன்(Miovision- Data Processing Technician), சிந்துஜன்(Ontario Power Generation- Design Engineering Intern), மகிலன்(Guelph Collegiate Vocational Institution) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பேபி சரோஜா(இலங்கை), முத்துலிங்கம்(கனடா), இராசலிங்கம்(அவுஸ்திரேலியா), சண்முகநாதன்(கனடா), ஜெகதீஸ்வரன்(அவுஸ்திரேலியா), புவனேஸ்வரி(அவுஸ்திரேலியா), பாஸ்கரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், தேவகுரு நாதன், ஸ்ரீகல்யாணி, நிர்மலா, மதிவதனி, சந்திரவதனி, சண்முகலிங்கம், துஷ்யந்தி, சிவசோதி, கரிகாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், தனஸ்ரீ, ஜீவிதன், நிருஜா, மதுரவிஜிதா, சஜீவ், கஸ்தூரி, சுவேதன், அஜந்தன், சிந்துஜா ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும், விதுரன், ரமணன், ஜனனி, பாதுஷன், பவிஷன், சகானா ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும், செங்கோடன், அமுதா, பிரேமளா, அஜந்தன், ஜனகன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||
|