துயர் பகிர்வு அறிவித்தல்
திருமதி நல்லம்மா தர்மராசா
மலர்வு : 2 மார்ச் 1944 — உதிர்வு : 6 செப்ரெம்பர் 2017
யாழ். வசாவிளான் வன்னியர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி பத்திரகாளி கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா தர்மராசா அவர்கள் 06-09-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தர்மராசா அவர்களின் அன்பு மனைவியும், சத்தியபாமா, ஜெகதீஸ்வரி(பவளம்), விமலேஸ்வரி, காலஞ்சென்ற விக்கினேஸ்வரி, அருந்தவராசா(கண்ணன்), றதீஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், கந்தசாமி, சுந்தரமூர்த்தி, அச்சுதன், சற்குணராஜா, சிவரூபராணி, மோகனதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற வரதராஜன் மற்றும் வரதராணி ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும், காலஞ்சென்றவர்களான முத்தையா, யோகராசா, இரட்ணராசா மற்றும் சின்னமணி, மகாலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02.00 மணியளவில் பொலிகண்டி ஊரணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||
|